அனைவருக்கும் பகிருங்கள் - பாலக்காட்டில் இருந்து சுற்றுலா சென்ற 15 வயது சிறுமியை காணவில்லை

#India #Lanka4 #search #Rescue #Girl #Missing #Help
Prasu
2 months ago
அனைவருக்கும் பகிருங்கள் - பாலக்காட்டில் இருந்து சுற்றுலா சென்ற 15 வயது சிறுமியை காணவில்லை

பாலக்காட்டில் இருந்து சுற்றுலா சென்ற ஸ்ரீநந்தா என்ற 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். கடந்த 7ம் திகதி குடும்பத்தாரும் அயலவர்களும் சேர்ந்து சுற்றுலா சென்றபோது காணாமல் போயுள்ளார்.

7ம் திகதி மாலை 5:20 மணிக்கு வரை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். 5:30 மணிக்கு திரும்ப புறப்படும் பொது தான் குழந்தை காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது உடனே பத்து நிமிடங்களுக்குள் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது நான்காவது நாளாகியும் எந்த தகவலும் இல்லை. சுமார் 100 பேருக்கும் அருகிலான ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் 25 பேர் கொண்ட போலீஸ் குழு அங்கு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

images/content-image/1775846784.jpg

மேலும் சில தனியார் நிறுவனங்களும் தேடுதலில் இருக்கின்றன. பாலக்காட்டிலிருந்து இளைஞர்கள் குழுவும் தேடுதலுக்கு சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் குழந்தை காணாமல் போனதில் பெரிய சந்தேகம் இருப்பதாக குடும்பம் தெரிவித்துள்ளது. காரணம், அந்த நேரத்தில் அங்கு நிறைய பேர் இருந்தனர்.

ஏதாவது விபத்து நடந்திருந்தால் கண்டிப்பாக யாராவது பார்த்திருப்பார்கள். ஆனால் யாரும் எதையும் பார்த்ததாக இல்லை.

தற்போது தேடுதல் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தை பாதுகாப்பாக கிடைத்துவிடுவாள் என்று நம்புகிறோம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4