ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கையிலெடுக்கும் ட்ரம்ப்!

#America #world_news #War #Iran #ImportantNews #L4 #IranVsIsrael #DonaldTrump
Lakhi
2 months ago
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கையிலெடுக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை ஊடாக மசகு எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதை ஈரான் அனுமதிக்கும் விதம் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான முறையில் செயல்படுகிறது.

சிலர் இதனை 'கௌரவமற்ற செயல்' என்று கூடச் சொல்வார்கள்," என ட்ரம்ப் சாடியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியத்துவமான ஹோர்முஸ் நீரிணையில் எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாகக் கருதப்படுகிறது.

எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், அதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப்போவதாக ஈரான் அதிகாரிகள் எச்சரித்து வரும் நிலையில் ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. உலக சந்தைக்குத் தேவையான மசகு எண்ணெயில் பெரும் பகுதி இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4