விவசாயத் துறையில் நவீன புரட்சி: வறுமையற்ற கிராமங்களை உருவாக்க ஜனாதிபதி இலக்கு.

#SriLanka #LANKA4 #President #Village #Agriculture #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
விவசாயத் துறையில் நவீன புரட்சி: வறுமையற்ற கிராமங்களை உருவாக்க ஜனாதிபதி இலக்கு.

கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே எமது அரசின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 59 ஆவது தேசிய புத்தரிசி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், விவசாயிகளின் நில உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சிக்கலற்ற காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிதைந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை மீளப்புனரமைக்கும் திட்டத்தை அரசு உறுதியுடன் செயல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தம்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமத்திய மாகாண மகா கால்வாய் திட்டத்தின் கீழ், மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை கொண்டு செல்லும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!