வாழ்க்கைச் செலவு 300 வீத அதிகரிப்பு : சம்பள உயர்வை எப்போது வழங்குவீர்கள்?

#SriLanka #Lanka4 #Salary #Living #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
வாழ்க்கைச் செலவு 300 வீத அதிகரிப்பு : சம்பள உயர்வை எப்போது வழங்குவீர்கள்?

நாட்டின் வாழ்க்கைச் செலவு 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஈடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை சம்பளம் உயர்த்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. 

அது தற்போது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விலை உயர்வால் வாழ்க்கைச் செலவு 300 வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஈடாக சம்பளம் உயரும் வரை மக்கள் காத்திருக்கிறார்கள்.

" அரச துறையில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

"முன்னர் நிலக்கரியில் பிரச்சினை இல்லை என்று கூறப்பட்டது, இப்போது பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது. கணக்காய்வு அறிக்கையின்படி, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை. 

அத்துடன் அதன் தரத்தை பரிசோதித்த ஆய்வக அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது." இந்த நிலக்கரி ஊழலானது நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு நேரடியாகப் பலம் சேர்த்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பொய்கள் மற்றும் ஊழல்கள் மூலம் மக்களை ஏமாற்றாமல், அதிகரித்துள்ள சுமைக்கு ஏற்ப மக்களுக்குத் தீர்வினை வழங்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். Latest News வடக்கு தொடருந்து சேவைகள் நாளை முதல் வழமைக்கு - புத்தாண்டுக்காக மேலதிக தொடருந்துகள் இணைப்பு! Local 08 April 2026 வடக்கு தொடருந்து சேவைகள் நாளை முதல் வழமைக்கு - புத்தாண்டுக்காக மேலதிக தொடருந்துகள் இணைப்பு! வாழ்க்கைச் செலவு 300 வீத அதிகரிப்பு : சம்பள உயர்வை எப்போது வழங்குவீர்கள்? -

நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி Local 08 April 2026 வாழ்க்கைச் செலவு 300 வீத அதிகரிப்பு : சம்பள உயர்வை எப்போது வழங்குவீர்கள்? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது Local 08 April 2026 நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் - 10 பேருக்கு வகுப்புத் தடை! Local 08 April 2026 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் - 10 பேருக்கு வகுப்புத் தடை! ஒகஸ்ட் மாதம் வரை எரிபொருள் இருப்பதாகக் கூறி ஏமாற்ற வேண்டாம் - அரசாங்கத்தின் வரி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடிய நாமல் எம்.பி !


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!