தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் நெருக்கடி: அவசரத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை!

#SriLanka #Lanka4 #National Identity Card #national #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 week ago
தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் நெருக்கடி: அவசரத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை!

இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தன்படி, கணினி கட்டமைப்பை சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டை விடயங்களைச் சரிபார்த்தல் மற்றும் அரசாங்க, அரசு சாரா நிறுவனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் வழக்கமான பொதுச் சேவைகள் மற்றும் ஏனைய அலுவலகப் பணிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!