IPL M13 - தொடரின் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்
#Lanka4
#IPL
#Cricket
#Rajasthan
#Mumbai
#2026
Prasu
1 hour ago
2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 39 ஓட்டங்களும் ஜெய்ஸ்வால் 77 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 151 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 11 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. மும்பை அணி சார்பில், நமன் தீர் 25 ஓட்டங்களும் ரதபோர்ட் 25 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )