யாழ். மருதனார்மடம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: பொலிஸார் தீவிர விசாரணை.

#SriLanka #Jaffna #Police #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
யாழ். மருதனார்மடம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: பொலிஸார் தீவிர விசாரணை.

யாழ்ப்பாணம், சுன்னாகம் காவல்பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றினுள் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் ஒருவரின் உடலம் இன்று(07) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிணற்றிலிருந்து விவசாய பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காக விவசாயி ஒருவர் சென்ற நிலையில் கிணற்றுக்கு அருகாமையில் பாதணியை அவதானித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றை அவர் எட்டிப் பார்த்தபோது கிணற்றுக்குள் ஆண் ஒருவரின் உடலம் அமிழ்ந்த நிலையில் இருப்பதை அவதானித்த நிலையில் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த உடலம் கிணற்றின் அடியில் காணப்படுவதுடன் கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!