வைத்தியசாலை சேவையில் பொதுமக்களின் ஈடுபாடு: பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியின் கருத்துக்கள்.

#SriLanka #Jaffna #Hospital #Lanka4 #Public #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வைத்தியசாலை சேவையில் பொதுமக்களின் ஈடுபாடு: பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியின் கருத்துக்கள்.

பரீட்சை எழுதிய நாளில் இருந்து உங்களுடைய பெறுபேறுகள் வரும் நாள் வரை பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் மன உளைச்சலோடு காலங்களை கழித்திருப்பீர்கள். 

உயர்தர கற்கை காலங்களில் பிற விடயங்களை புறந்தள்ளி உணவு, நித்திரை போன்றவற்றிலும் கவனம் செலுத்தாமல் அதிக அக்கறையோடு படித்திருப்பீர்கள். அதன் காரணமாக பரீட்சை முடிந்தவுடன் freedom என்ற பெயரில் உங்களுக்கு விருப்பமான பல்வேறு பழக்க வழக்கங்களை பின்பற்ற தொடங்கி இருப்பீர்கள்.

பெற்றோர்களும் அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உங்களை சரிசெய்ய வழியின்றி பல்கலைக்கழகம் அனுப்பினால் போதும் என்ற மனநிலையிலும், அங்கு நீங்கள் சிறப்பாக வழிநடத்தப்படுவீர்கள் எனவும் முழுமையாக நம்புகின்றார்கள். 

இதற்கிடையில் உங்கள் பரீட்சை பெறுபேறுகள் உங்களுக்கும், பெற்றோருக்கும், மற்றும் உங்கள் கரிசனையில் இருக்கும் பலருக்கும் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அதற்கு மேலாக சமூக ஊடகங்களில் உங்களின் பெறுபேறுகள் பல்வேறு விதமாக பிரசுரிக்கப்பட்டதால் அதிலும் மன நெருக்கடி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 

ஏனெனில் பலர் தங்கள் மனநிலைக்கு ஏற்றவகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள். உங்களை பலர் தொடர்பு கொள்ள விரும்புவார்கள். நலலவர்களை இலகுவில் அடையாளம் காண முடியாது. இருப்பினும் இதில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வது நன்று. 

உங்களில் சிலர் மீண்டும் இவ்வருட பரீட்சைக்கு தயாராக வேண்டும். நண்பர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். நான் அடுத்த வருடம் செல்வேன் எனற எண்ணம் உங்களுக்கு முக்கியமான ஊக்கசக்தியாக இருக்கும். ஆகவே தற்போது உங்களுக்கு இருக்கும் மனநிலை மற்றும் நாளாந்த செயற்பாடுகள் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு போதுமானவை அல்ல. உங்கள் தினசரி செயல்பாடுகளில் சில நிச்சயமாக சில நன்மைகளை தரக்கூடியவை இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் பல செயற்பாடுகளில் மாற்றம் தேவை. கீழ்வரும் பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் ஆளாகி இருக்கக்கூடும்.

1.அதிகளவு தொலைபேசி பாவனை மற்றும் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஈடுபட்டு இருப்பீர்கள். 

2.கிரமமான நித்திரை இன்மை. நடுநிசியில் தொலைபேசியிலும் பகல் நித்திரையிலும் சிலர் சிக்கி இருப்பீர்கள்.

3.நேர்த்தியான சமநிலை உணவு பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டிருக்க கூடும். ஆகவே இவற்றை மீள நேர்த்தியான வழிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை செய்ய சில விடயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு உரிய ஆயத்தங்களை செய்ய வேண்டும். மீண்டும் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கள் ஊக்கத்தோடு, பெற்ற அனுபவத்தில் முறையாக படிக்கத் தொடங்க வேண்டும். இருதரப்பினரும் சமநிலை வாழ்க்கைக்கு (Balance Life) சில விடயங்களை கைக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்கள் கீழ் வரும் விடயங்களை தெரிந்து கொள்வது நன்று. ஏனெனில் நீங்கள் செல்லும் இடம் புதியது. புதியவர்களை சந்திக்கப்போகின்றீர்கள். 

சில சவாலான விடயங்களை இலகுவாக ஏற்றுக்கொண்டு உங்கள் முயற்சி நோக்கி பயணிக்க நீங்கள் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆகவே பல்கலைக்கழகம் செல்லும் முன்னர் உங்களை வலுப்படுத்த இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியே அறிவு சார்ந்த விடயத்துக்கு அப்பால் உடல், உள, ஆத்ம ஆரோக்கியம் உள்ளவர்களாக சென்றால் மாத்திரமே உங்களால் சுலபமாக பல்கலைக்கழக கல்வியோடு பல்வேறு திறன்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். 

ஆகவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்! உயர்தர (A/L) பரீட்சை முடித்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த இடைப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. 

சரியான ஆயத்தங்களும் அனுபவங்களும் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பல்கலைக்கழகம் செல்ல முன் செய்ய வேண்டிய ஆயத்தங்கள்

1. உங்களுடைய கல்வி மற்றும் இதர தேவைகளுக்கான ஆவணங்களை ஒரு கோவையில் இட்டு வைத்தல். ( Birth certificate, Results sheets, any certificates during School period).

2.தேர்ந்தெடுத்த அல்லது தேர்ந்தெடுக்கப் போகின்ற பாடநெறி பற்றி ஆராய்தல்.

3.அறிவுத் திறன்களை மேம்பாடு செய்தல். அடிப்படை English & IT திறன்களை வளர்த்தல் Critical thinking, communication skills பயிற்சி Presentation & teamwork திறன்கள் வளர்த்தல். Online courses (Coursera, edX போன்றவை) பயன்படுத்துதல்.

4.பொருளாதாரத் திட்டமிடல். Scholarship, Mahapola, Bursary போன்ற உதவித்தொகைகள் பற்றி அறிதல் மாதாந்திர செலவுத் திட்டம் (budgeting) பழகுதல் Bank account இல்லாவிட்டால் தொடங்குதல் 

5.மனநிலை மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தவும்.

 a. Self-discipline

 b. Time management

 c. Stress management 

 d.adaptation திறன் வளர்த்தல்

 e. புதிய சூழலுக்கு ஏற்ற மனநிலை உருவாக்குதல்

2. தொண்டு பயிற்சி (Volunteer Experience) – ஏன் முக்கியம்? இதுவரையில் பெற்றோரின் முழு கவனத்திலும் பாடசாலை மற்றும் பிற நிறுவனங்களின் உதவிகளை நேரடியாக அல்லது மறைமுகமாக பெற்றிருப்பீர்கள். 

ஆகவே இப்போது நல்ல தருணம் நீங்கள் பிறருக்காக ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்வது. பல்கலைக்கழக வாழ்க்கைக்கு முன் சமூக சேவையில் ஈடுபடுவது மிகவும் பயனுள்ளதாகும்.

இதன் மூலம் உங்களுக்கு பின்னாளில் பெரும் நன்மைகள் கிடைக்கும். இதுவரை நீங்கள் தனித்து தலைமை ஏற்று செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாக காணப்பட்டிருக்கும். 

இந்த தொண்டு பயிற்சியை செய்வது மூலம் நீங்கள் பல தலைமைத்துவ பண்புகளை உடையவர்களாக மலருவீர்கள். அது மாத்திரமல்ல நாம் வாழும் சூழலிலே இருக்கின்ற பல்வேறு கட்டமைப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரியவரும். 

 இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய தொடர்பாடல் திறன் அதிகரிக்கும். இவ்விடயம் பின்னாளில் உங்களுடைய வளர்ச்சி

உறுதுணையாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு என்பது முக்கியமானது அவ்வாறான ஒரு விடயத்தை பற்றி கற்றுக் கொள்வதற்கு நீங்கள் ஏதாவது ஒரு தொணடு கடமையை செய்திருந்தால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் வாழ்க்கையின் பல்வேறு படி நிலைகளில் நீங்கள் மேலும் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். 

நோயாளர் சேவைக்கு உதவுதல். உங்களுக்கு அண்மையில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ளவர்களோடு தொடர்புண்டு நோயாளிகளுக்கும் அங்கு வழங்கப்படுகின்ற சேவைகளுக்கும் உதவியாக ஏதாவது ஒரு சேவையை செய்ய முடியும். இதன் மூலம் வைத்தியசாலை கட்டமைப்பு, அங்கே நடைபெறும் செயற்பாடுகள் என்பவை பற்றி உங்களுக்கு தெளிவாக புரிதல் ஏற்படும்.

நீங்கள் வைத்தியத்துறையோடு சம்பந்தப்பட்ட கற்கை நெறி ஒன்றை தேர்வு செய்ய உத்தேசித்திருந்தால் இந்த அனுபவம் உங்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும்.

கற்பித்தல். நீங்கள் இதுவரை பெற்ற இலவச கல்வியை இக்கால பகுதியில் ஏதாவது ஒரு வகையில் யாதும் ஒரு பிரிவினருக்கு உங்களால் வழங்க முடியும் . அது அயல் பாடசாலையாக இருக்கலாம் பொருத்தமான கல்வி நிலையமாக இருக்கலாம். 

உங்களுடைய கற்பித்தலும் ஊக்குவித்தலும் அவர்களையும் பின்னாளில் பல்கலைக்கழகம் செல்ல அல்லது உயர் கற்கை ஒன்றுக்கு உந்துதலாக இருக்கும். 

சுற்றுச்சூழல் மற்றும் பொது சேவை செய்தல் முக்கியமானது. Tree planting campaigns, Beach/area cleaning programs, Disaster relief volunteering இன்பவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு தொண்டு சேவையை செய்து முடியுங்கள். தொண்டு பயிற்சியை எப்படி தொடங்குவது என உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும்.

அருகிலுள்ள மருத்துவமனை, பாடசாலை மற்றும் சமூக அமைப்புகளை (NGOs) நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று வாரத்திற்கு குறைந்தது 1–2 நாட்கள் தொண்டு சேவையை செய்யலாம்.

இந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்தால் உங்களுக்கு பின்னாலில் உதவியாக இருக்கும் (portfolio). முக்கிய அறிவுரை என்று எதையும் கூறி வட முடியாது.

இருப்பினும் இந்த காலத்தை வீணாக்காமல் “Self-development period” ஆக பயன்படுத்துங்கள். Social media-வில் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமான (productive) செயல்களில் ஈடுபடுங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனியுங்கள் (exercise, நல்ல உணவு) பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் முன் இந்த இடைப்பட்ட காலம் உங்கள் வாழ்க்கையின் அடித்தளமாக அமையும்.

சரியான ஆயத்தங்களும், தொண்டு அனுபவங்களும், திறன் மேம்பாடுகளும் உங்கள் எதிர்காலத்தை உயர்த்தும். வாழ்த்துக்கள் ! 

வளமான சமுதாயத்தை கட்டி எழுப்புங்கள்!

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!