IPL M10 - லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
#Lanka4
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Lucknow
Prasu
1 hour ago
10 அணிகள் இடையிலான 19வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 10வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
கிளாசன் 62 ஓட்டங்களும் நிதிஷ்குமார் ரெட்டி 52 ஓட்டங்களும் குவித்தனர். 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 160 ஓட்டங்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
லக்னோ அணி சார்பில், எய்டன் மார்க்கரம் 45 ஓட்டங்களும் ரிஷாப் பண்ட் 68 ஓட்டங்களும் பெற்றனர்.
(வீடியோ இங்கே )