பண்டிகைக் காலத்தில் தொலைபேசி ஊடாக இடம்பெறும் சைபர் மோசடிகள் அதிகரிப்பு!

#SriLanka #Festival #Lanka4 #Fraud #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #cyber crime
Abi
4 months ago
பண்டிகைக் காலத்தில் தொலைபேசி ஊடாக இடம்பெறும் சைபர் மோசடிகள் அதிகரிப்பு!

பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல கருத்துத் தெரிவிக்கையில் "எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் (Discounts), பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் (Links) சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுகிறது.

"என தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4