கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோரவிபத்து இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Kilinochchi #Young #ImportantNews
Lakhi
4 months ago
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோரவிபத்து இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 03-04-2026 ,10 ம் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டர் கிரேண்டர் வாகனத்தின்மீது பின்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஜெரின் கனிஸ்ரன் வயது 19, தியாகராசா விக்கினேஸ்வரன்18 குறித்த வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இறந்த இரு இளைஞர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4