இன்று காலை முதல் மீண்டும் மருத்துவர்கள் போராட்டம் - முடங்கும் சுகாதார சேவை!

#SriLanka #Health #strike #doctor #ImportantNews #L4
Lakhi
4 months ago
இன்று காலை முதல் மீண்டும் மருத்துவர்கள் போராட்டம் - முடங்கும் சுகாதார சேவை!

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் சுகாதார அமைச்சருடனான மோதல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8.00 மணி முதல் தனது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பயிற்சியை முடித்த மருத்துவர்களின் இடமாற்றங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறும் மருத்துவர்கள் "அநீதியான இடமாற்றங்களுக்கு" எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். அதேநேரம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச்; செயலாளர் பிரபாத் சுகததாச ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தில்;, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் உத்தரவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பயிற்சி முடித்த மருத்துவர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நண்பகல் 12.00 மணி வரை பொதுச் சேவை நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய மருத்துவர்கள் பல்வேறு தரப்பினரால் அச்சுறுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட சுகததாச, இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் கூறுகிறார். ஆனால், "முதல் முறைப்பாடு அமைச்சருக்கு எதிராகவே செய்யப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4