கொழும்பின் பல பகுதிகளில் இன்று திடீர் நீர் வெட்டு!

#SriLanka #Colombo #government #water #ImportantNews #L4
Lakhi
4 months ago
கொழும்பின் பல பகுதிகளில் இன்று திடீர் நீர் வெட்டு!

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கலட்டுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பல பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. அதற்கமைய பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய நான்கு வலயங்களில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த கட்டமாக பாதுக்க பகுதிக்கு எதிர்வரும் 7 ஆம் திகதியும், ஹோமாகமவிற்கு ஏப்ரல் 8 ஆம் திகதியும், பெலன்வத்தைக்கு ஏப்ரல் 9 ஆம் திகதியும் மீண்டும் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4