மியான்மரின் புதிய ஜனாதிபதியாக ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவு

#Election #Parliament #Lanka4 #President #Myanmar #Military #L4
Prasu
2 months ago
மியான்மரின் புதிய ஜனாதிபதியாக ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவு

மியான்மரின் புதிய ஜனாதிபதியாக ராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கை அந்நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. 

இராணுவத்தின் ஆதரவுடன் நடைபெற்ற தேர்தல் செயல்முறையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலை ராணுவமே ஏற்பாடு செய்ததால் இது சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் ஜனாதிபதி பதவிக்கான மூன்று வேட்பாளர்களில் மின் ஆங் ஹ்லேங் ஒருவராக இருந்தார்.

நாடாளுமன்றத்தில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் மற்றும் நியமிக்கப்பட்ட இராணுவ உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது போலத்தான் இருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4