கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சி: 24 மணிநேர நீர் வெட்டு அறிவிப்பு - முழு விபரங்கள் உள்ளே!

#SriLanka #Colombo #water #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சி: 24 மணிநேர நீர் வெட்டு அறிவிப்பு - முழு விபரங்கள் உள்ளே!

கலடுவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார இது குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ஹோமாகம, பாதுக்க, மகரகம, பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும்.

குறித்த பகுதிகளில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை (5 ஆவது நாளில்) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும். முன்னதாக 24 மணிநேரமாகத் திட்டமிடப்பட்ட நீர் வெட்டு காலம், தற்போது 18 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலவும் தேவையைக் கருத்திற்கொண்டு 3, 6, 12, 15 அல்லது 18 மணிநேரங்கள் வரை நீர் விநியோகம் தடைப்படக்கூடும். சில குறிப்பிட்ட பகுதிகளில் எவ்வித நீர் வெட்டும் அமுல்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படும் காலம் மற்றும் நேரம் குறித்த விபரங்கள், நுகர்வோரின் நீர் கட்டணத்துடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி ஊடாக முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும் எனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நீர்த்தேக்கத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே போதுமான நீர் இருப்பு உள்ளது. இதனால் நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு 90,000 கன மீட்டரிலிருந்து 75,000 கன மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

லபுகம நீர்த்தேக்கத்தில் சுமார் 45 நாட்களுக்குத் தேவையான நீர் உள்ளது. தற்போதைய நிலையில் கொழும்பு மாநகரப் பகுதிகளுக்கு நீர் விநியோகத்தைத் தடை செய்ய எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

நிலவும் கடும் வரட்சி காரணமாக பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4