மலையக மீள்கட்டமைப்புத் திட்டம்: பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

#SriLanka #PrimeMinister #Project #Lanka4 #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
மலையக மீள்கட்டமைப்புத் திட்டம்: பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மற்றும் அதிகாரிகளுடனான மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சந்திப்பு 28.03.2026 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, டிட்வா சூறாவளியால் முழுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கும் ரூ.50 இலட்சத்திற்கும் குறையாமல் வீடு மற்றும் காணி வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் அங்கத்தவர்களுக்கு உறுதியளித்தார்.

மேலும் மலையக மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் அங்கத்தவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது, மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதிநிதிகள், மலையகப் பகுதிக்கு மாடி வீடுகள் அமைக்கும் திட்டம் பொருத்தமற்றது என சிவில் அமைப்புகள் ஒருமித்தமாகத் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட மக்களின் வீடு மற்றும் காணி உரிமைகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்-சிறுவர் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ் மொழி அமுலாக்கமின்மை மற்றும் நிவாரணப் பணிகளில் நிலவும் பாகுபாடுகள் குறித்து பிரதமரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.

இடைக்கால தங்குமிட முகாம்களில் உள்ள அடிப்படை வசதிக் குறைபாடுகள் மற்றும் நிவாரண முறைகேடுகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4