எண்ணெய் விலை உயர்வு: ட்ரம்ப் எச்சரிக்கையால் அதிர்ச்சி!

#prices #world_news #Lanka4 #Warning #Oil #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
எண்ணெய் விலை உயர்வு: ட்ரம்ப் எச்சரிக்கையால் அதிர்ச்சி!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரிய உயர்வைக் கண்டுள்ளன.

அதன்படி, நேற்றைய தினம் 100 டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு பீப்பாய் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை, தற்போது 5 சதவீதம் வரை அதிகரித்து 106.29 டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 104.29 டொலர் வரை அதிகரித்துள்ளது.

போர் பதற்றங்கள் தணியும் என்ற நம்பிக்கையில் கடந்த சில நாட்களாக எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வந்தன. எனினும், "போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் மற்றும் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்"என ட்ரம்ப் ஆற்றிய உரை, எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஈரானுடனான மோதல் நீடிப்பதனால் ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகும்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் உலகப் பொருளாதாரத்தில் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4