777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை!

#SriLanka #Women #Lanka4 #WorldRecord #Record #L4
Prasu
4 months ago
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை!

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.

கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார்.

images/content-image/1775066406.jpg

இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னசில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார்.

கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார்.

images/content-image/1775066425.jpg

குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் இன்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார்.

முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகர்வும் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4