மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிப்பு

#War #Lanka4 #Production #Middle East #L4 #Condom
Prasu
3 months ago
மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிப்பு

மத்திய கிழக்கு போர் உலகெங்கும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வளைகுடா போரால் இந்தியாவின் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஆணுறைகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆணுறை தயாரிப்பில் முக்கிய பொருட்களாக உள்ள சிலிகான் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் அமோனியா விலையேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக நாட்டின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், "பாலிவினைல் குளோரைடு ஃபாயில், அலுமினிய ஃபாயில், பாலி, கெமிக்கல் மற்றும் பிற பேக்கிங் பொருட்கள் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இது எங்கள் உற்பத்தியைப் பாதித்துள்ளது. குறிப்பாக அமோனியாவின் விலை 40-50 சதவீதம் வரை உயரக்கூடும். சிலிகான் எண்ணெய்யும் கூட கணிசமான அளவுக்கு விலை ஏறக்கூடும். இது சந்தையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4