கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாதனை படைத்த மாணவர் திருக்குமரன்!

#SriLanka #Student #government #Examination #ImportantNews #Mathematic #L4
Lakhi
4 months ago
கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாதனை படைத்த மாணவர் திருக்குமரன்!

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழிமூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த விடயத்தை பாடசாலையின் அதிபர் இளவேந்தி நிர்மலராஜ் எமது செய்திப் பிரிவுக்கு உறுப்படுத்தினார். அத்துடன், உயர்தர வணிகப் பிரிவில் மட்டக்களப்பு, காத்தான்குடி மகா வித்தியாலய மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் பர்தான், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர் அஹமட் லெப்பை சப்ரி எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பரீட்சை மோசடிகள் அல்லது ஏனைய காரணங்களுக்காக, 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெறுபேறுகள் தொடர்பாகத் திருப்தியடையாத மாணவர்கள், தமது விடைத்தாள்களை மறுசீராய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4