இன்றைய ராசிபலன் (01.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: உற்சாகமான நாள். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்ப்பு விலகும். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். எதிர் பார்த்த பணம் வீடு தேடி வரும். கார்த்திகை 1: ஆற்றல் அதிகரிக்கும். மனம் தெளிவடையும். திட்டமிட்டு செயல்படுவீர். வழக்கு சாதகமாகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். உறவினர்களை சந்திப்பீர். நிலுவையில் இருந்த வேலை நடக்கும். ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுவீர். மிருகசீரிடம் 1,2: முயற்சியில் அக்கறை தேவை. வேலைகளில் இருந்து கவனம் சிதறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் நெருக்கடி உண்டாகும். முடிவு சாதகமாகும். திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: ஆற்றல் வெளிப்படும். விருப்பம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
கடகம்
புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். பூசம்: கவனமாக செயல்படுவீர். வியாபாரத் தடை நீங்கும். பயணம் ஆதாயம் தரும் நாள். ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
சிம்மம்
மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். பூரம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சேமிப்பு உயரும். உத்திரம் 1: உங்கள் பணியில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கன்னி
உத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் ஏற்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடம் நீங்கும்.
துலாம்
சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். உழைப்பு அதிகரிக்கும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற் கொள்வீர். சுவாதி: வியாபாரத்தில் கவனம் தேவை. செலவிற்கேற்ற பணம் வரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்
விசாகம் 4: யோகமான நாள். வேலைகளில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். அனுஷம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். கேட்டை: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர் பார்த்த வரவு வந்து உங்கள் நெருக்கடியை நீக்கும்.
தனுசு
மூலம்: முன்னேற்றமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பர். வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமை பளிச்சிடும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம்: தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.
கும்பம்
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். இன்று அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். சதயம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும்.
மீனம்
பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி லாபம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் நீங்கும்.
உத்திரட்டாதி: தடை பட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
ரேவதி: உங்களுக்கு எதிராக செயல் பட்டவர் மனம் மாறுவர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கிரிவலம் மேற்கொள்வீர்.
(வீடியோ இங்கே )