இஸ்ரேலில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா

#Death #Parliament #Law #Israel #Palestine #lanka4Media #L4
Prasu
3 hours ago
இஸ்ரேலில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, இஸ்ரேலியர்களை கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு ராணுவ நீதிமன்றங்களுக்கு இந்த மசோதா உத்தரவிடுகிறது.

ஆனால், பாலஸ்தீனியர்களை கொல்லும், கொன்றதாகக் குற்றம் சாட்டப்படும் இஸ்ரேலிய யூதர்களுக்கு இந்த தண்டனை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 30 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தச் சட்டம், 120 இடங்களைக் கொண்ட நெசெட்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட 62 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பிரிவினருக்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை 'ஒரு போர்க்குற்றம்' என்று அழைத்த பாலஸ்தீன நிர்வாகம், இது நான்காவது ஜெனீவா உடன்படிக்கையை மீறுவதாகக் கூறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!