இருளில் மூழ்கும் வீதிகள்; அதிகரித்துவரும் விபத்துக்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சம்.

#SriLanka #Accident #people #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
6 hours ago
இருளில் மூழ்கும் வீதிகள்; அதிகரித்துவரும் விபத்துக்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சம்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீதி மின்விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அணைப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு ஜனாதிபதி, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இலங்கையில் அதிகளவிலான வீதி விபத்துக்கள் இடம்பெறும் காலப்பகுதியாக இந்த இரவு நேரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு நேரத்தில் திட்டமிட்டு வீதி விளக்குகளை அணைப்பதானது, வீதிப் பாதுகாப்பை வேண்டுமென்றே சீர்குலைப்பதாகும். இதனை ஒரு மரணத்திற்குத் துணைபோகும் செயலாகவே நாம் பார்க்கிறோம்.

வீதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தல்.

பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்தல் என்பவற்றிற்கு இந்த விடயம் வழிவகுக்கும். அதேபோன்று பொதுமக்களின் பாதுகாப்பு முற்றாக சீர்குலையும்.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பசில் ராஜபக்ச இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கு எதிராகவும் எமது அமைப்பு குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போதைய அரசாங்கம் இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்களை தவிர்த்து, முறையாகச் செயற்படுமானால், அன்று இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட பசில் ராஜபக்ச போன்றவர்களை சட்டப்பூர்வமாக இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என நாம் நம்புகிறோம்.

வீதி மின்விளக்குகள் மற்றும் சமிஞ்ஞை விளக்குகளுக்கு சூரிய சக்தியைப் (Solar Power) பயன்படுத்துவதற்கோ அல்லது மின்சாரத் தடையின் போது அவை இயங்குவதை உறுதிப்படுத்தும் முறையையோ இதுவரை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. 

இது மனித உயிர்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!