சுவிஸ் நாட்டில் ரொலெக்ஸ் கடிகாரம் வாங்க 3 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?
சுவிஸ் என்றாலே சொக்லேட் மற்றும் கடிகாரங்களின் சொர்க்கம் என்பது தெரியும். மணிக்கூடுகள் தரம் தரமாக இருப்பதும் அதில் ராடோ, புல்கார், ஒமெக்ஸ், ரொலெக்ஸ் என பல வகைகள் உண்டு.
ரொலெக்ஸ் கடிகாரத்தை விட தரமான விலை உயர்வான கடிகாரங்கள் இருந்தாலும் அதிகமானவர்கள் றொலெக்ஸ் கடிகாரத்தை வாங்குவதை நாம் அறிகிறோம்.
ஆனால் அதை வாங்குவது இலகுவான விடையம் அல்ல. வாங்க விரும்புவோர் முன்கூட்டியே முன் பதிவு செய்யவேண்டும். அது உங்கள் கையில் கிடைக்க 1 தொடக்கம் 3 வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
அதுவும் தற்போது நீங்கள் அக்கடிகாரத்தை கட்டுபவர் 3 லட்சம் வரி செலுத்திய அத்தாட்ச்சி காட்டவேண்டும்.
நீங்கள் முன்பதிவு செய்யும்பொழுது கடிகாரத்தின் விலை 10,000.- சுவிஸ் பிராங்குகளாக இருப்பின் 2 வருடத்தில் அதன் விலை 2000-3000 பிராங்குகள் அதிகமாகிவிடும்.
றொலெக்ஸ் கடிகாரத் வைரம் பதித்தால் அதன் பெறுமதி 25000-30000.- சுவிஸ் பிராங்குகளை எட்டும். முக்கியமாக றொலெக்ஸ் கடிகாரத்தின் உதிரிப்பாகங்கள் அனைத்தும் கையால் செய்யப்படுகிறது. இயந்திரத்தால் அல்ல.
அதுவும் பெறுமதிக்கு ஒரு காரணமாக அமைகிறது.
குறிப்பாக சுவி நாட்டில் வாழும் 25% ஆனோர் றொலெக்ஸ் கடிகாரத்தை அணிகின்றனர்.
சுவிஸ் நாட்டுக்கு வரும் ஒருவர் பழைய கடிகாரத்தையே இங்கு கடைகளில் வாங்கமுடியும்.
(வீடியோ இங்கே )