சுவிட்சர்லாந்தில் 12 டன் கிட்கேட் சாக்லேட்கள் திருட்டு
சுவிட்சர்லாந்தில் ஒரு லாரியிலிருந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிட்காட்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிட்காட்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்று நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலிக்கும் போலந்திற்கும் இடையே கொண்டு செல்லப்பட்டபோது, கடந்த வாரம் இந்த மாபெரும் அளவிலான சாக்லேட் காணாமல் போனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கிட்காட் உடன் ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் எப்போதும் மக்களை ஊக்குவித்து வருகிறோம், ஆனால் திருடர்கள் அந்தச் செய்தியை மிகவும் நேரடியான பொருளில் எடுத்துக்கொண்டு, எங்களின் 12 டன்களுக்கும் அதிகமான சாக்லேட்டைத் திருடிச் சென்றுள்ளனர்" என்று கிட்காட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "குற்றவாளிகளின் தனித்துவமான ரசனையை நாங்கள் பாராட்டினாலும், சரக்குத் திருட்டு என்பது அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதே உண்மை.
மேலும் நுட்பமான திட்டங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், பெருகி வரும் இந்தக் குற்றச் செயல் போக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், எங்களின் சொந்த அனுபவத்தை நாங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )