IPL M01 - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

#Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #Bengaluru #2026 #L4
Prasu
2 months ago
IPL M01 - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

19வது ஐ.பி.எல் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 80 ஓட்டங்களும் அனிகேத் சர்மா 43 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது.

இந்நிலையில், 202 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 என்ற இமாலய இலக்கை எளிதாக எட்டியது.

பெங்களூரு அணி சார்பில், கோலி 69 ஓட்டங்களும் படிக்கல் 61 ஓட்டங்களும் படிதார் 31 ஓட்டங்களும் பெற்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4