ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாருடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

#Ukraine #Lanka4 #UAE #Security #Agreement #Qatar #L4
Prasu
2 months ago
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாருடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கத்தாரும் உக்ரைனும் கையெழுத்திட்டுள்ளதாக கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்ததைத் தொடர்ந்து, தோஹாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதனை தொடர்ந்து சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்தபோது உக்ரைனும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்பில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்துவதில் தனது நிபுணத்துவத்தை வளைகுடா நாடுகளுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்த கீவ் முயன்று வருகிறது. 

மேலும், ஜெலென்ஸ்கி தனது தூதரகப் பயணத்தின் போது சென்ற மூன்று நாடுகளுக்கும் ஆளில்லா விமான எதிர்ப்பு நிபுணர்களை அனுப்பியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4