அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறித்து பென்டகன் அவதானம்!!

#world_news #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறித்து பென்டகன் அவதானம்!!

ஈரான் உடனான தற்போதைய போரில் அமெரிக்க இராணுவம் இதுவரை 850க்கும் மேற்பட்ட டொமஹாக் ரக ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

துல்லியமாகத் தாக்கும் இவ்வாறான நவீன ஆயுதங்கள் மிக வேகமாகச் செலவிடப்படுவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தின் சில அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன், மேலதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது குறித்து உள்ளக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கெரோலின் லெவிட், ஜனாதிபதி ட்ரம்பின் 'Operation Epic Fury') நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்கும், அதற்கும் அப்பால் செயற்படுவதற்கும் தேவையான அளவு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் அமெரிக்க இராணுவத்திடம் கையிருப்பில் உள்ளன, எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4