ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?

#Health #Fruits #Benefits #ImportantNews #ADDA #L4
Lakhi
2 hours ago
ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?

ஆயுர்வேதத்தின்படி, மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக அமையும் எனப்படுகின்றது. நெல்லிக்காயில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளது.

வைட்டமின் சி மட்டுமின்றி, நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவையும் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கூறுகளும் உள்ளன. இதனால்தான், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான நெல்லிக்காய், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு வரமாகக் கருதப்படுகிறது.

images/content-image/2024/03/1774662109.jpg

நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

  • நெல்லிக்காயில் உள்ள கூறுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் நெல்லிக்காய் சாப்பிடுவது அவசியம். நீரிழிவு நோயாளிகளுக்கும் நெல்லிக்காய் மிகவும் நன்மை தரும். உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் நெல்லிக்காய் உதவும்.

வயிற்றுப் பிரச்சனைகளைத் தணிக்கிறது

  • நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அது குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் என்று கருதப்படுகிறது. உங்களுக்கு அடிக்கடி அடிக்கடி மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால் அதன் பிரச்சனைகளுக்கு விடை கொடுக்க ஒரு நாளைய்க்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். 

அளவோடு உட்கொள்ளுங்கள்

  • நெல்லிக்காயில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடலாம். கண் பார்வையை மேம்படுத்த நெல்லிக்காயை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை, சரியான அளவிலும் சரியான முறையிலும் உட்கொள்ள அவசியம். ஒரு வேளை அதிகமாக நெல்லிக்காயை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!