ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் புதிய சர்வதேசத் திட்டம்!

#world_news #International #Fuel #War #Iran #ImportantNews #Open #L4
Lakhi
1 hour ago
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் புதிய சர்வதேசத் திட்டம்!

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துத் தடையால் உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு புதிய விசேட பணிக்குழுவை (Task Force) அமைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக அத்தியாவசிய வர்த்தகப் பொருட்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை வடிவமைப்பதே இந்தப் பணிக்குழுவின் முக்கிய நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் திட்டச் சேவைகளுக்கான அலுவலகத்தின் (UNOPS) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜார்ஜ் மோரேரா டா சில்வா (Jorge Moreira da Silva) தலைமையிலான இந்தப் பணிக்குழு, உக்ரைனுக்கான 'கருங்கடல் தானிய முயற்சி' (Black Sea Grain Initiative) மற்றும் காசாவிற்கான 'UN2720 வழிமுறை' ஆகியவற்றைப் போன்றதொரு கட்டமைப்பை உருவாக்கும்.

குறிப்பாக, உலக விவசாயத்திற்குத் தேவையான 30 சதவீத உரங்கள் (Fertilizers) இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இப்பணிக்குழு உர வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளிக்கும். வரும் ஜூன் மாதம் வரை இந்தப் போர் நீடித்தால், உலகெங்கிலும் பல கோடி மக்கள் கடுமையான பசிப் பிணிக்கு ஆளாவார்கள் என ஐநா உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!