மரண அறிவித்தல் - அமரர் கருணா
சுவிட்சர்லாந்தில் கலை மற்றும் பண்பாட்டு துறையின் வளர்ச்சியில் அழியாத தடம் பதித்தவர் கருணா. 1990களின் பிற்பகுதியில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வையும் அதன் உண்மையையும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் கலையின் வழியாக எடுத்துச் சென்ற முக்கிய கலைஞர்களில் ஒருவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவருடைய குடும்பமும் பல்வேறு வழிகளில் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளது என்பது பெருமைக்குரியது.
அமரர் கருணா அவர்களின் மறைவு செய்தி எம்மை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்க்கையை தனக்காக மட்டுமல்லாது, தமிழ் தேசிய நலன்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் அர்ப்பணித்தவர் என்ற நினைவு என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்பு உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
செய்தி
சுவிஸ் விஷன்
(வீடியோ இங்கே )