வடமராட்சி கிழக்கு யானை அச்சுறுத்தல்: முற்றுப்புள்ளி வைக்க ரஜீவன் எம்.பி அதிரடி!

#SriLanka #Elephant #Lanka4 #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
வடமராட்சி கிழக்கு யானை அச்சுறுத்தல்: முற்றுப்புள்ளி வைக்க ரஜீவன் எம்.பி அதிரடி!

அண்மையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கட்டைக்காடு பகுதிகளில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார் 

பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனத் திணைக்களம் போன்றவர்களோடு பேசி யானைகளை விரட்டியடிப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததுடன் யானைகள் திசை மாறி வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதகவும் தெரிவித்தார்

இதில் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம், பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான பரிதா ஜெகதீஸ், கோ. கணைச்செல்வன், உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை நிச்சியவெட்டை கேவில் வீதி திருத்த வேலைகளையும் பார்வையிட்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கிரவல் பிரச்சனை காரணமாக கால தாமதமாகியிருந்த குறித்த வீதி திருத்த பணிக்கு சம்மந்தப் பட்டவர்களுடன் பேசி உடனடியாக கிரவல் பெற்றுக்கொள்ள நடவடிக்கையையும் மேற்கொண்டார்

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4