எரிபொருள் சட்டத்தை மீறியவருக்கு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

#SriLanka #Lanka4 #Court #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
எரிபொருள் சட்டத்தை மீறியவருக்கு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய நபர் ஒருவருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை மற்றும் 1,500 ரூபாய் அபராதம் விதித்து நிக்கவரட்டிய நீதவான் சந்தன லியனகே தீர்ப்பளித்துள்ளார்.

எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கோபெய்கனே காவல்துறையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதயங்க அத்தபத்து நீதிமன்றத்தில் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த தனது பெற்றோரின் நினைவாக எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வுக்காக வீட்டைச் சுத்திகரிக்க, புல் வெட்டும் இயந்திரத்திற்குப் பயன்படுத்தவே இந்த பெற்றோல் வைக்கப்பட்டிருந்தது.

இது விற்பனைக்காகவோ அல்லது சட்டவிரோத வர்த்தகத்திற்காகவோ வைத்திருக்கப்படவில்லை. இது தொடர்பான மத வழிபாட்டு நிகழ்வு உறுதிப்படுத்தப்பட்ட கடிதமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர் பெற்றோலை வைத்திருக்க அனுமதி உள்ள போதிலும், அனுமதிக்கப்பட்ட அளவு குறித்து சட்டத்தில் தெளிவான வரையறை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இருப்பினும், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகநபர் ஏற்றுக்கொண்டதையடுத்து, நீதவான் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4