ஹரியானாவில் காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மருத்துவ மாணவி

#India #Death #Student #Hospital #Medical #Lanka4 #L4
Prasu
6 hours ago
ஹரியானாவில் காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மருத்துவ மாணவி

ஹரியானா மாநிலத்திலுள்ள, அம்பாலா என்னுமிடத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணொருவர் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள டெஹ்ராடூனில் மருத்துவம் பயின்றுவந்துள்ளார். 

தன் தந்தையை அழைத்த அவர் பேசும்போது கவலையாக இருந்ததை கவனித்த அவரது தந்தை, பின்னர் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பதிலளிக்காததால் மகளைத் தேடி புறப்பட்டுள்ளார்.

மகள் தங்கியிருந்த இடத்தை அடைந்த அவர், தன் மகளைத் தேடியும் அவர் கிடைக்காததால் அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த மருத்துவமனையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணின் காருக்குள் அவர் சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டுள்ளார்.

கார் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து அவர் தனது மகளை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல, அந்த இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தனது மகள் மரணத்தைத் தொடர்ந்து, தன் மகளுடைய துறைத்தலைவர் அவருக்கு கடந்த நான்கு மாதங்களாக தொந்தரவு கொடுத்துவந்ததாக தந்தை புகாரளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் புகார் பதிவு செய்துள்ளார்களே தவிர அந்த நபர் மீது வழக்குப் பதியவில்லை. 

காரணம், ஏற்கனவே அந்த இளம்பெண் மன நல பாதிப்பு ஒன்றிற்காக சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கடந்த டிசம்பர் மாதம் அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் மருத்துவக்கல்லூரி கூறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!