ஈரான் மீதான தாக்குதல் கெடு மேலும் நீட்டிப்பு...! ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!

#America #world_news #War #Iran #ImportantNews #L4 #IranVsIsrael #DonaldTrump
Lakhi
2 months ago
ஈரான் மீதான தாக்குதல் கெடு மேலும் நீட்டிப்பு...! ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை மேலும் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் ஏப்ரல் ஆறாம் திகதி வரை தாக்குதல்களை நிறுத்திவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் விடுத்த விசேட கோரிக்கையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 போலிச் செய்தி ஊடகங்கள் கூறும் தவறான தகவல்களுக்கு மாறாக இராஜதந்திர ரீதியிலான நகர்வுகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் மிரட்டலை இவ்வாரம் வெள்ளிக்கிழமை வரை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்தக் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஈரானியத் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ட்ரம்ப்பின் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் நிலவும் கடும் பதற்றத்தைச் சற்றே தணிக்கும் எனச் சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4