இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரி கொலை
#Death
#Israel
#War
#Lanka4
#Iran
#Navy
#L4
Prasu
1 hour ago
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அபாஸ் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பில் இவர் ஈடுப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது.
ஆனால் ஈரானோ, இஸ்ரேலிய ராணுவமோ இந்த தகவலை தற்போதுவரை உறுதி செய்யவில்லை.
ஒருவேளை இந்தக் கொலை உறுதிசெய்யப்பட்டால், அது ஈரானின் ராணுவத் தலைமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
(வீடியோ இங்கே )