வடகொரியா ஜனாதிபதிக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ் ஜனாதிபதி

#NorthKorea #Lanka4 #President #Agreement #Visit #Belarus #L4
Prasu
2 months ago
வடகொரியா ஜனாதிபதிக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ் ஜனாதிபதி

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு மேற்கொண்ட தனது முதல் பயணத்தின்போது, ​​கிம் ஜாங் உன்னுக்கு ஒரு தானியங்கித் துப்பாக்கியைப் பரிசளித்துள்ளார். 

எதிரிகள் தோன்றினால் வட கொரியத் தலைவருக்கு அது தேவைப்படலாம் என்று அவர் நகைச்சுவையாகக் கூறி பரிசை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கிம் ஜாங் உன், பெலாரஸ் நாட்டவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய மொசைக் குவளையை அலெக்சாண்டர் லுகாஷென்கோவிவிற்கு பரிசளித்துள்ளார்.

இந்த பயணத்தில் லுகாஷென்கோவிற்கு கிம் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இப்போது "ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன" என்று அறிவித்து, இரு தலைவர்களும் "நட்பு மற்றும் ஒத்துழைப்பு" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4