JKT ஒருங்கிணைந்த பண்ணையின் 7ம் ஆண்டு விழா: புதிய விளம்பர பலகை திறப்பு
புதுக்குடியிருப்பு திம்பிலி சந்தியில் JKT ஒருங்கிணைந்த பண்ணையின் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய விளம்பர பலகை திறந்து வைக்கப்பட்டது.
இத்தாலியில் வசிக்கும் தமிழரான ம. கிருபாகரன் அவர்களின் முயற்சியில் இயங்கி வரும் JKT ஒருங்கிணைந்த பண்ணையின் 7ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவரது தந்தை அமரர் சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக அயராத உழைப்பு, மக்களின் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான சேவையின் மூலம் வளர்ச்சி அடைந்து வரும் இப்பண்ணை, தற்போது தனது அடுத்த கட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறீ பவானந்தராசா, இத்தாலியில் வசிக்கும் உறவுகளான கஜேந்திரன் – துஸ்யந்தி தம்பதியினர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்களான சுரேந்திரன் மற்றும் முரளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், நவீன மற்றும் இயற்கை விவசாய அறிவை பரப்புதல், சமூக சேவைகளில் தொடர்ந்து பங்காற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு JKT ஒருங்கிணைந்த பண்ணை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“இயற்கையோடு இணைந்து மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது” என்பதே இப்பண்ணையின் பிரதான இலக்காகும்.

(வீடியோ இங்கே )