ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் விதித்த புதிய கட்டுப்பாடு!

#world_news #Country #War #Iran #ImportantNews #Rule #L4
Lakhi
3 months ago
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் விதித்த புதிய கட்டுப்பாடு!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்கும் வகையில்,

ஹோர்முஸ் நீரிணையில் "பகைமையற்ற கப்பல்கள்" பயணிப்பதற்கு ஈரான் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

ஈரானின் புதிய போக்குவரத்து விதிகள், சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது இந்த புதிய நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

பகைமையற்ற கப்பல்கள் இந்த நீரிணையைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், ஈரானிய அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இந்த நிலையில் ஈரான் தனது கடல் எல்லைக்குள் (தீவுகளுக்கு இடையே) ஒரு குறுகிய பாதையை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் செல்லும் கப்பல்களை ஈரான் சோதனையிட்டு உறுதிப்படுத்திய பின்னரே அனுமதி வழங்குகிறது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4