அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் இல்லை!

#America #world_news #Israel #War #Iran #ImportantNews #L4 #DonaldTrump
Lakhi
3 months ago
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் இல்லை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறுவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டானோன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் "விவேகத்துடன்" பேசுவதாகவும், பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று டானோன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இராணுவ இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன, அது தொடரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்கள் "நிறைய சாதித்துள்ளன," ஆனால் அனைத்தும் முடிந்துவிடவில்லை.

ஈரான் அணு ஆயுதங்களையோ அல்லது பெலிஸ்டிக் ஏவுகணைகளையோ தயாரிக்கும் திறனை முற்றாக இழப்பதை உறுதி செய்வதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஈரான் தனது ஏவுகணைகள் 2,000 கிலோமீட்டருக்கு மேல் பாயாது என்று கூறிவிட்டு, 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி ஏவுகணையை ஏவியதாக டானோன் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலைத் தான் நடத்தவில்லை என ஈரான் மறுத்துள்ளது.

இதற்கிடையில், டியாகோ கார்சியா மீது ஏவப்பட்டவை ஈரானிய ஏவுகணைகள் தான் என்பதைத் தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4