யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய காவல்துறையினர்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை!

#SriLanka #Jaffna #Police #Tourist #Attack #beach #ImportantNews #L4
Lakhi
5 hours ago
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய காவல்துறையினர்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை!

யாழ். மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது சிவில் உடையில் இருந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடமும், ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த விடயத்தை யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையிலிருந்து மணல்காட்டிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் மது அருந்திய நிலையில் மேலாடைகள் இன்றித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அதில், தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் திணைக்கள வாகனத்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சிவில் உடையில் இருந்த அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்டமை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையிலும் தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முதற்கட்ட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!