விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் அரசு: ஒரு கோடியே 20 இலட்சம் கிலோ நெல் சேகரிப்பு!
வடமாகாணத்தில் எந்தவொரு ஆண்டும் இல்லாதவாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இது வரை விவசாயிகள் ஒருகோடியே இருபது இலட்சம் கிலோ கிராம் நெல்லை வழங்கியுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவிப்பு இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவரின் ஒழுங்குபடுத்தலிலும் விவசாய அமைச்சரின் ஆலோசணைக்கமைய வடமாகாணத்தில் மிகவும் வினைத்திறனாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் மூன்று களஞ்சியசாலைகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதினைந்து களஞ்சிய சாலைகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து களஞ்சியசாலைகளிலும், வவுனியா மாவட்டத்தில் ஆறு களஞ்சியசாலைகளிலும் கொள்வனவு செய்யப்படுகின்றது.
தனியார் துறையினரை விட அதிக இலாபம் கிடைப்பதாலும் முன்னைய காலங்களை விட விரைவாக விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதாலும் விவசாயிகள் மிக ஆர்வமாக நெல்லை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்