துருக்கியில் நடந்த வீதி விபத்தில் சுவிற்சர்லாந்து வாழ் இலங்கை தமிழர்கள் மூவர் மரணம்
#Death
#Switzerland
#Accident
#Turkey
#SriLankan
#L4
Prasu
1 hour ago
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், சுவிற்சர்லாந்து நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம்- நவாலியை பூர்வீகமாக கொண்ட 60 வயது ஜெயநந்தினி கணேசலிங்கம் அவரது 28 வயது மகன் விபூசன் கணேசலிங்கம் மற்றும் 47 வயது சிவாஸ்கரன் சுகந்தி ஆகியோர் அடங்குகின்றனர்.
தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர் மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )