இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்குச் சவாலா? சர்வதேசத்தின் தலையீட்டை கோரும் எதிர்க்கட்சிகள்!

#SriLanka #International #Law #Rule #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்குச் சவாலா? சர்வதேசத்தின் தலையீட்டை கோரும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இது தொடர்பாக சர்வதேச தொழில்முறை அமைப்புகளின் அவசரத் தலையீட்டை கோரி ஒன்றிணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச, பாடலி சம்பிக்க ரணவக்க, ஜீவன் தொண்டமான், மனோ கணேசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். 

கடந்த ஆண்டில் 60-க்கும் மேற்பட்ட மரணங்களும், இந்த ஆண்டில் இதுவரை 9 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், நவீன ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி திட்டமிட்ட முறையில் கொலைகள் அரங்கேற்றப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 13-ம் திகதி, அதி பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமை நீதித்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெப்ரவரி 16 அன்று சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால் உச்சநீதிமன்றம் முதல் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. 

படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக ஆஜரானவர் என விசாரணைக்கு முன்னரே காவல்துறை வெளியிட்ட கருத்தை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. 

இது சம்பவத்தின் தீவிரத்தை திசைதிருப்பும் பொறுப்பற்ற செயல் என்றும், காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். 

முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) மூலம் மக்களின் அதிருப்தியை ஒடுக்க அரசாங்கம் முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையை (ICCPR) மீறுவதோடு, ஊடக நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை நேரடியாக இலக்கு வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் (IBA), பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!