கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள்: வெளியான தகவல்

#Canada #America #world_news #ImportantNews #citizenship #L4
Lakhi
3 months ago
கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள்: வெளியான தகவல்

கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தம் (Bill C-3) காரணமாக அமெரிக்காவிலிருந்து கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த விடயத்தைக் குடிவரவுச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், 2025 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, கனடாவுக்கு வெளியே பிறந்த பல தலைமுறையினருக்குக் குடியுரிமை பெறுவதற்கான புதிய வழியாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் முதலாம் தலைமுறை கனடியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த உரிமை, தற்போது கனடாவில் பிறந்த ஒருவரின் நேரடி வாரிசுகள் (பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எத்தனை தலைமுறையினரும்) மற்றும் தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

 2023இல் ஒண்டாரியோ உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தினால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெடிப்பைப் போல (Exploded) அதிகரித்துள்ளதாக ஓட்டாவாவைச் சேர்ந்த சட்டத்தரணி கசாண்ட்ரா ஃபல்ட்ஸ் (Cassandra Fultz) குறிப்பிட்டுள்ளார். கனடா அரசு தற்போது ஒட்டுமொத்தக் குடிவரவைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வரும் போதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தத் தலைமுறை அடிப்படையிலான குடியுரிமை உரிமையை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

தகுதியுள்ளவர்கள் தாங்கள் கனடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான முறையான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4