நோயாளர்களுக்கு நற்செய்தி: எரிபொருள் நெருக்கடியால் சுகாதார அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!

#SriLanka #Health #Ministry #Patients #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
நோயாளர்களுக்கு நற்செய்தி: எரிபொருள் நெருக்கடியால் சுகாதார அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு, அரச மருத்துவமனைகளின் முறைமை சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை இனி ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது..

நோயாளர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களின் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதிய மருந்து கையிருப்பு உள்ள மருத்துவமனைகளின் இந்த வாரம் முதலே இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை நோயாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மருந்து தட்டுப்பாடு நிலவும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை சுகாதார அமைச்சு உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்கள் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே நேரத்தில் பெற்றுக்கொண்ட போதிலும், அவர்களுக்கு ஏதேனும் திடீர் உடல்நலக் குறைவு அல்லது அவசர நிலை ஏற்பட்டால், அவர்கள் எந்நேரமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!