மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் வான் போக்குவரத்து பாதிப்பு: பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை.

#SriLanka #Traffic #air #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Middle East #L4
Abi
4 hours ago
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் வான் போக்குவரத்து பாதிப்பு: பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை.


இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை சர்வதேச வானூர்தி சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.

இது குறித்து சிவில் வானூர்தி போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் தம்மிக ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில்,சர்வதேச வானூர்திகளுக்கான Jet A-1 ரக எரிபொருள் எதிர்வரும் ஏப்ரல் 16 வரை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

உள்நாட்டு வானூர்தி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் சிறிய ரக வானூர்திகளுக்குத் தேவையான Avgas ரக எரிபொருள், அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, மேலதிக Jet A-1 மற்றும் Avgas எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய கொள்வனவு கட்டளைகள் (Orders) ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் வானூர்தி சேவைகளில் எவ்விதத் தடங்கல்களும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வானூர்தி எரிபொருள் கையிருப்பு மற்றும் தரவுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக "தேசிய வானூர்தி எரிபொருள் ஒருங்கிணைப்புப் பிரிவு" (National Aviation Fuel Coordination Unit) எனும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை பிரதிநிதிகள்,இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனப் பிரதிநிதிகள்,இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து வானூர்தி சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகிய தரப்பினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!