எரிபொருள் விலை உயர்வால் விவசாயம் முடங்கும் அபாயம்: தவிக்கும் விவசாயிகள்!

#SriLanka #prices #Farmers #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
எரிபொருள் விலை உயர்வால் விவசாயம் முடங்கும் அபாயம்: தவிக்கும் விவசாயிகள்!


எரிபொருள் விலையதிகரிப்பு காரணமாக நாட்டின் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் 80 முதல் 90 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அறுவடை காலத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் ஏனைய விவசாய உபகரணங்களுக்கான சேவைக்கட்டணம் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஏக்கர் நெல் அறுவடைக்கான செலவு 25,000 ரூபா வரையிலும், வயல் உழுவதற்கான செலவு 20,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலை இருந்தபோதிலும், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பைக் காரணம் காட்டி, கொள்வனவாளர்கள் ஒரு கிலோகிராம் நெல்லை 110 ரூபாவிற்கும் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்வதாக அனுராத தென்னக்கோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 120 ரூபா கிடைக்க வேண்டிய இடத்தில் விவசாயிகள் நட்டத்தையே எதிர்நோக்குகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் விவசாய உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக வரும் மாதங்களில் அரிசி, மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். 

குறிப்பாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மலையக மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!