பேருந்து நிலையங்களில் முடிவில்லா வரிசை: நடுத்தர மக்கள் வீதியில் தவிப்பு!

#SriLanka #Bus #Road #Class #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
பேருந்து நிலையங்களில் முடிவில்லா வரிசை: நடுத்தர மக்கள் வீதியில் தவிப்பு!

பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படும் வரை பல தனியார் பேருந்து சங்கங்கள் சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்ததைத் தொடர்ந்து, இன்று காலை பேருந்து தரிப்பிடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால் பேருந்துக் கட்டணங்களைத் திருத்த வேண்டியது அவசியம் என பேருந்து சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன.

அதன்படி, எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பேருந்துக் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிவு, இன்று ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!