திசை மாறும் போர்க்களக் கணக்குகள் - ஆய்வாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

#world_news #War #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
திசை மாறும் போர்க்களக் கணக்குகள் - ஆய்வாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலானது, அமெரிக்காவின் போர் வியூகங்களை முற்றாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தோஹா பட்டக் கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் முஹனத் செலூம் இது குறித்து அல் ஜசீராவுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த தாக்குதல் போரின் போக்கை மாற்றியுள்ள விதம் குறித்து விளக்கியுள்ளார்.

அதில், ஈரானிடம் 2,000 கிலோமீற்றர் தூரம் வரை பாயக்கூடிய ஏவுகணைகளே இருப்பதாக இதுவரை கருதப்பட்டு வந்தது. எனினும், டியாகோ கார்சியா மீதான தாக்குதல் மூலம், ஈரானிடம் 4,000 கிலோமீற்றருக்கும் அதிகத் தூரம் பாயக்கூடிய ஏவுகணைகள் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இது சர்வதேச சமூகம் இதுவரை அறிந்திருக்காத ஒரு புதிய தகவலாகும். இந்த ஏவுகணைகளின் திசையை மாற்றினால், அவை லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களை எளிதில் சென்றடையக்கூடியவையாக இருக்கும்.

இது போரில் நேரடியாக இணைய இதுவரை தயக்கம் காட்டி வந்த பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பு நிலையை மீளப்பரிசீலனை செய்யத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் விண்வெளித் திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைக் கருத்திற்கொள்ளும் போது, அவர்கள் அமெரிக்காவையே தாக்கக்கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகளை வைத்திருக்கக்கூடும் எனவும் ஆய்வாளர் செலூம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலானது ஈரானின் இராணுவ வலிமை குறித்த முந்தைய மதிப்பீடுகளை மாற்றியுள்ள நிலையில், சர்வதேச அளவில் புதிய பாதுகாப்பு நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!